நாமக்கல்லில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
நாமக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரம் கொண்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டது. இந்தச் சிலையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதியின் உருவச்சிலை அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையை அவர் வணங்கினார்.
இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, ரா.ராஜேந்திரன், மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெ.ராமலிங்கம், கே.பொன்னுசாமி மற்றும் தொகுதிப் பார்வையாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிலை திறப்பு விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.