Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

147 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 147 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
01:14 PM Feb 04, 2025 IST | Web Editor
Advertisement

காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கவும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் ஆகிய மூன்று இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் இந்த காலநிலை மாற்ற நிர்வாக குழுவில் பல்துறை வல்லுநர்கள் மற்றும் பல்துறை மூத்த அரசு செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற 3வது உச்சி மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும்" என அறிவித்தார். இதனையடுத்து, அவர் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டார்.  147 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Advertisement
Next Article