Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஷச்சாராய விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

10:39 AM Jun 20, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை தலைமைச்செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  

Advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.  சட்டப் பேரவையின் இன்றைய அலுவல்கள் முடிந்தவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு,  பொன்முடி,  முத்துசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்  ஆலோசனையில் பங்கேற்றனர்.,  டிஜிபி,  உளவுத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்தார்.

Tags :
CM MK StalinCMO TamilNaduDMK GovtKallakurichiKarunapuramSpurious LiqourTN Govt
Advertisement
Next Article