பிரேமலதா விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 18) தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேமுதிக நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : நோன்பு கடைபிடித்த கிரிக்கெட் வீரர் – மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
பிரேமலதா விஜயகாந்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக பிரேமலதா விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிறந்தநாளையொட்டி, அவரை இன்று (18.3.2025) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.