இன்று மாலை ஆளுநர் ரவியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் ஆளுநர் முதலமைச்சரும் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஆளுநர் தரப்பிலிருந்து சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், மழை நிவாரண பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த சில நாட்களாக சந்திக்க முடியாத நிலை இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதலமைச்சர், ஆளுநரிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள மசோதா பிரச்சனையை இருவரும் பேசி தீர்க்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யோசனை கூறி இருந்த நிலையில், இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை சந்திக்க உள்ளார்.