Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி!

09:19 PM Aug 06, 2024 IST | Web Editor
Advertisement

கோப்புப் படம்

Advertisement

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 6-வது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை (ஆக.7) காலை அமைதிப்பேரணி நடைபெறுகிறது.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவரும், திமுகவின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவருமான மு.கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி மறைந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட அண்ணா நினைவிட வளாகத்தில், தற்போது நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதியின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் ஆண்டுதோறும், அண்ணாசாலை, வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று, கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அண்ணா சாலையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டது. அந்தாண்டு முதல், கருணாநிதி சிலையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டும், நாளை காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் புறப்பட்டு, கருணாநிதி நினைவிடத்தில் முடிகிறது. நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Tags :
CMO TamilNaduformer chief ministerKarunanidhiMK Stalinnews7 tamilNews7 Tamil Updatestamil nadu
Advertisement
Next Article