Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!

இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
08:00 AM Sep 03, 2025 IST | Web Editor
இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான `தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா' முதலீட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜெர்மனியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 ஆயிரத்து 819 கோடி மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Advertisement

இந்த நிலையில், ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சரை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். மேலும் முதலமைச்சருடன் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்டாரி வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இங்கிலாந்தில் கால் வைத்ததும் தமிழர்களின் பாசத்தால் அரவணைக்கப்பட்டேன், கடல் கடந்த இந்த பயணத்தில் வீட்டின் நறுமணத்தை பெற்றேன். உற்சாக வரவேற்பால் உள்ளம் மகிழ்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
CHIEF MINISTERDMKENGLANDGermanyM.K. StalinPeopleTamilNadu
Advertisement
Next Article