Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நதிநீர் இணைப்பு திட்டம் | சோதனை ஓட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

05:29 PM Dec 17, 2023 IST | Web Editor
Advertisement

தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பிவிடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும்(டிச.17,18) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் விடாமல் கொட்டி வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கூடங்குளம்- திருச்செந்தூர் சாலையிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதையும் படியுங்கள் :தொடர் கனமழையால் அதிகரிக்கும் பேச்சிப்பாறை அணையின் நீர் வரத்து – அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு!

தொடர் மழையால் தென் மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், தாமிரபரணி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அதனை தொடர்ந்து, தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
CHIEF MINISTERConnectionKarumeniyarM.K.StalinNambiyarProjectThamirapharanitrial
Advertisement
Next Article