Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் பயணம்! - பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்!

01:40 PM Nov 09, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும் நாளையும் விருதுநகர் மாவட்டம் சென்று அங்கு கட்சி நிகழ்வுகள் மற்றும் அரசு நல திட்டங்களை துவங்கி வைக்க உள்ளார்.

Advertisement

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் சென்ற முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து, கன்னிச்சேரிபுதூர் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொள்கிறார் முதலவர் மு.க.ஸ்டாலின். பிறகு,  பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், மாலையில் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கட்சி நிர்வாகிகள்கலந்துகொள்ளும் நிகழ்வில் முதலமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

அதன்பிறகு நாளை காலை, விருதுநகர் குமாரசாமி ராஜா நகரில் ரூ.77.12 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை முதலமைசார் திறந்து வைக்கிறார். பின்னர், பட்டம்புதூரில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார் என்று முதலமைச்சரின் 2 நாள் பயணம் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Next Article