Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருச்சியிலிருந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

08:03 PM Mar 20, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு மக்களவைக்கான தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Advertisement

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்த வரை ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், இன்று (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் விபரம் குறித்து திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

2024 ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார். திமுக தலைவர் மேற்கொள்ளும் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வருமாறு.

 

தேதி                                                 நாடாளுமன்ற தொகுதி 

22/03/ 2024 (வெள்ளிக்கிழமை) – திருச்சி, பெரம்பலூர்

23/03/2024 (சனிக்கிழமை) – தஞ்சை, நாகை

25/03/2024 (திங்கட்கிழமை) – கன்னியாகுமரி, திருநெல்வேலி

26/03/2024 (செவ்வாய்க்கிழமை) – தூத்துக்குடி, ராமநாதபுரம்

27/03/2024 (புதன்கிழமை) – தென்காசி, விருதுநகர்

29/03 /2024 (வெள்ளிக்கிழமை) தர்மபுரி, கிருஷ்ணகிரி

30/03/2024 (சனிக்கிழமை) – சேலம், கிருஷ்ணகிரி

31/03/2024 (ஞாயிற்றுக்கிழமை) – ஈரோடு, நாமக்கல், கரூர்

02/04/2024 (செவ்வாய்க்கிழமை) – வேலூர், அரக்கோணம்

03/04/2024 (புதன்கிழமை) – திருவண்ணாமலை, ஆரணி

05/04/2024 (வெள்ளிக்கிழமை) – கடலூர், விழுப்புரம்

06/04/2024 (சனிக்கிழமை) – சிதம்பரம், மயிலாடுதுறை

07/04/2024 (ஞாயிற்றுக்கிழமை) – புதுச்சேரி

09/04/2024 (செவ்வாய்க்கிழமை) – மதுரை, சிவகங்கை

10/04/2024 (புதன்கிழமை) – தேனி, திண்டுக்கல்

12/04/2024 (வெள்ளிக்கிழமை) – திருப்பூர், நீலகிரி

13/04/2024 (சனிக்கிழமை) – கோவை, பொள்ளாச்சி

15/04/2024 (திங்கள்கிழமை) –  திருவள்ளூர், வடசென்னை

16/04/2024 (செவ்வாய்க்கிழமை) – காஞ்சிபுரம், திருபெரும்புதூர்

17/04/2024 (புதன்கிழமை) – தென் சென்னை, மத்திய சென்னை

மேலும், 

“முதலமைச்சர் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் பிரச்சாரத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டியுள்ளதால், காலத்தின் அருமை கருதி, எக்காரணம் கொண்டும் திமுக தோழர்கள், வழியில் வேறு எவ்வித நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திட வேண்டாம் என கண்டிப்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
DMKElection UpdateElections with News7 tamilElections2024Lok Sabha Elections 2024MK StalinParliament Election 2024
Advertisement
Next Article