Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பொது முன்னுரை நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
01:28 PM Mar 25, 2025 IST | Web Editor
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Advertisement

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி சார்பில் 133 கோடி மதிப்பீட்டில் சேலம் மாவட்டம் - அரியகவுண்டம்பட்டியில் அடுக்குமாடி வெள்ளி கொலுக உற்பத்தி வளாகம், கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தொழிலாளர் தங்கும் விடுதி, திருவாரூர் மாவட்டம் - வண்டாம்பாளை, கடலூர் மாவட்டம் - காடாம்புலியூர், தூத்துக்குடி மாவட்டம் - லிங்கம்பட்டி,

Advertisement

சேலம் மாவட்டம் - உமையாள்புரம், காஞ்சிபுரம் மாவட்டம் - வையாவூர் ஆகிய இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள், சேலம் மாவட்டம் - தாதகாபட்டி, தூத்துக்குடி மாவட்டம் - கல்மேடு, கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் கோயம்பத்தூர் மாவட்டம் - வெள்ளலூர், ஈரோடு மாவட்டம் ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டை ஆகிய இடங்களில் புதிய பொது வசதி மையங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த பட்டு நூற்பாளர்களுக்கு பரிசுத்தொகையாக 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ் - இந்தோ- ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

 

 

 

Tags :
bookChennaiCHIEF MINISTERMKStalin
Advertisement
Next Article