ஊரகப் பகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டம் - தருமபுரியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஊரகப் பகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார்.
மக்களுடன் முதல்வர் திட்டம் ஏற்கெனவே நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, ஊரகப் பகுதிகளிலுள்ள உள்ளாட்சிகளிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஊரகப் பகுதியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே முடிக்கப்பட்ட ரூ. 444.77 கோடி மதிப்பிட்டில் 621 முடிவுற்ற திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இதில், எரிசக்தி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, வருவாய், பேரிடர் மேலாண் துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை, கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை, தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் 44 அரசு திட்டங்களின் சேவைகளுக்கான விண்ணப்பங்களை முகாம்களில் பொதுமக்கள் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பலர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.