செங்கல்பட்டில் ரூ.497 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த கள ஆய்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் வருகிறார். மேலும், அதனுடன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குவார். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
செங்கல்பட்டுக்கு இன்று (மார்ச் 11) தமது பிரசார வேனில் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறிது தூரம் சாலைகளில் நடந்து சென்று அவரை காண திரண்டிருந்த மக்களைச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.497.06 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அவர், முடிவுற்ற 47 திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.
முன்னதாக, நேற்று (மார்ச் 10) செங்கல்பட்டுக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாவட்டத்தில் ரூ. 515 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கோத்ரெஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.