ஏ.ஆர்.ரகுமான் நலமுடன் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர் ரகுமான். இந்த நிலையில், நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்று (மார்ச் 16) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ஏ.ஆர்.ரகுமானை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் உடல் நலன் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.