Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

02:24 PM Nov 22, 2024 IST | Web Editor
Advertisement

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisement

தமிழ்நாட்டின் வடபகுதிகளில் உள்ள நகரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினை கொண்டு செல்லும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளுவர் மாவட்டம் பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ.330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன், 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 22) திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், கண்காணிப்பு கேமரா வசதிகள், 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

6 ஆயிரம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டிடம் வழிமுறைகளின் படியும் இக்கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அந்த மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் டைடல் பூங்காவை திறந்து வைத்து உள்ளே சென்ற நிலையில் அவருக்கு தகவல் தொழில்நுட்பம் குறித்து அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். 2024 பிப்ரவரி மாதம் சேலத்தில் டைட்டில் பூங்கா திறக்கப்பட்டது. இன்று பட்டாபிராமில் டைட்டில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, Webberax Solutions, Dotnix Technologies LLP ஆகிய நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இவ்விழாவில், அமைசச்ர்கள் தா.மோ. அன்பரசன், எஸ்.எம்.நாசர், டி.ஆர்.பி. ராஜா மற்றும் எம்எல்ஏக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
DMKMK StalinPattabiramTidel Park
Advertisement
Next Article