Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வி.பி.சிங்கின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

11:31 AM Nov 27, 2023 IST | Web Editor
Advertisement

வி.பி.சிங்கின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisement

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சம் மதிப்பில்  வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இந்தச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் அவர்களின் மனைவி சீதா குமாரி மற்றும் வி.பி சிங் மகன் அஜயா சிங் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மேலும்  தமிழ்நாடு  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  கனிமொழி எம்.பி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

திருவுருவச் சிலையை திறந்து வைத்த பின் வி.பி.சிங்கின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதன் பின்னர் முதல்வர் ஸ்டாலின்,  அகிலேஷ் யாதவ்,  அமைச்சர் துரைமுருகன்,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி மற்றும் வி பி சிங்கின் குடும்பத்தினர் சிலைக்கு முன் குழுவாக படம் எடுத்துக் கொண்டனர்.

Advertisement
Next Article