சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10:55 AM Mar 19, 2025 IST
|
Web Editor
Advertisement
ஆங்கிலேய தொல்லியல் துறை அதிகாரியான சர் ஜான் மார்ஷல், ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் அறிக்கையை 20 செப்டம்பர் 1924இல் வெளியிட்டார்.
Advertisement
அந்த அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமாக இருப்பதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி நூறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த நிலையில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலை நிறுவப்பட்டுள்ளது. சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Article