Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

மத்திய அரசின் பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
07:03 AM Jan 26, 2025 IST | Web Editor
Advertisement

இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் விருதுகளை 139 பேருக்கு மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட பத்ம விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் அஜித்குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா சந்திரகுமார் ஆகியோருக்கும், பத்ம ஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருக்கும் அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், எ.டி.ஸ்ரீனிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தன், ஆர்.ஜி. சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் ,தேவசேனாபதி, சீனி.விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

தத்தமது துறைகளில் தாங்கள் மென்மேலும் உயரங்களை அடையவேண்டும், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
ajithCHIEF MINISTERcongratulatesMKStalinmodiPadma
Advertisement
Next Article