35 தொகுதிகளுக்கான நேர்காணலை நிறைவு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
02:58 PM Mar 10, 2024 IST
|
Web Editor
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட புதுச்சேரி உட்பட 5 தொகுதிகள் நீங்கலாக, 35 தொகுதிகளுக்கு வேட்பாளர் நேர்காணலை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார். தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி தவிர வேறு யாரும் விருப்ப மனு அளிக்காததால் கனிமொழி எம்பி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
Advertisement
மக்களவைத் தேர்தலில் 35 தொகுதிகளுக்கான நேர்காணலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்தார் .
Advertisement
திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டு முடித்தது. அதிமுகவும் விருப்பமனுக்களை பெற்றிருந்தது. இந்தநிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை தொடங்கியுள்ளது.
முதலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். திமுக நடத்தும் வேட்பாளர் நேர்காணல் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இன்று 20 தொகுதிகளுக்கும் நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது
Next Article