Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஈரோடு உழவர் சந்தை பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

09:30 AM Mar 31, 2024 IST | Web Editor
Advertisement

ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரித்தார். இன்று காலை ஈரோட்டில் உள்ள சின்னியாம்பாளையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைப் பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது சம்பத் நகர் மற்றும் அங்குள்ள உழவர் சந்தையில் நடந்து சென்று வியாபாரிகள், பொதுமக்களிடம் ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

மேலும் பொதுமக்களின் குறைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இன்று மாலை சோலார் பகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் ஈரோடு, கரூர், நாமக்கல் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக, காங்கிரஸ் (ஜோதிமணி), கொமதேக (மாதேஸ்வரன்) வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Tags :
CM MK StalinDMKElections with News7 tamilElections2024ErodeLok sabha Election 2024MK Stalin
Advertisement
Next Article