Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிப்ரவரி 13ம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

10:50 AM Feb 15, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள பிப்ரவரி 13ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்னை வருகிறார் .

Advertisement

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றன.  அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல இந்திய அளவில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த பிப்.06 சென்னை வந்தனர்.  இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ தலைமையில் , தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மலய் மாலிக்,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், புதுச்சேரி டிஐஜி ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில வாக்களர் பட்டியல், பதட்டமான வாக்குச்சாவடிகள், மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் நிலை, பாதுகாப்பு ஏற்பாடுகள்,  பணப்பட்டுவாடா, ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்வது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செலவினங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்
ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாகவும் ஆலோசனை மேற்கொண்டனர்.  இதில் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, ஆவடி , தாம்பரம் காவல் ஆணையர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை நடத்த பிப்ரவரி 23ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
ChennaiElectionElection commissionElection Commission CheifRajiv Kumar
Advertisement
Next Article