Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சத்தீஸ்கர் : கடந்த 3 ஆண்டுகளில் 51,730 நாய்க்கடி வழக்குகள் பதிவு!

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51,730 நாய்க் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
10:12 PM Feb 25, 2025 IST | Web Editor
Advertisement

சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 51,730 நாய்க் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் விஷ்ணு தியோ சாய் இன்று மாநில சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

Advertisement

பாஜக எம்எல்ஏ சுனில் சோனியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், ராய்ப்பூர் மாநகராட்சி எல்லையில் நாய்களுக்கான தங்குமிடம் கட்டப்பட்டு வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் நாய்கள் மனிதர்களைக் கடித்த 51,730 வழக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்வர் சாய் தனது பதிலில் தெரிவித்தார்.

2022-2023 இல் 13,042 வழக்குகள், 2023-2024 இல் 24,928 வழக்குகள் மற்றும் 2024-2025 இல் (ஜனவரி வரை) 13,760 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதேபோல், மூன்று ஆண்டுகளில் நாய்கள் விலங்குகளைக் கடித்த 2,803 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-2023 இல் 879 வழக்குகள், 2023-2024 இல் 986 வழக்குகள் மற்றும் 2024-2025 இல் (ஜனவரி வரை) 938 வழக்குகள் என்று கூறியுள்ளார்.

தெரு நாய்கள் கடிக்கு யாரும் பொறுப்புக் கூற முடியாது. தெரு நாய்களுக்கு ராய்ப்பூர் மாநகராட்சியில் தங்குமிடம் கட்டப்பட்டு வருகிறது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், நாய் கடி சம்பவங்களைத் தடுக்கவும், ராய்ப்பூர் நகராட்சி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சுகாதார மையங்களில் போதுமான சிகிச்சை வசதிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதுபோல சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளையும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தனது பதில் அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்தார்.

Tags :
Chhattisgarh GovernmentDogDog Bite Cases
Advertisement
Next Article