Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#ChennaiRains | “சீரான மின்சார விநியோகம் வழங்கப்படுகிறது.. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம்..” - #DyCM உதயநிதி பேட்டி!

11:33 PM Oct 15, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்தே விட்விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனிடையே ரிப்பன் மாளிகையில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி,

"அடுத்த 2 நாட்களுக்கு மழை அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். அதிகாரிகளுடன் வீடியோ காலில் பேசி மீட்பு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. யானைக்கவுனி, புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் மழையால் விழுந்த அனைத்து மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. பெருமழையால் விழுந்த 14 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 14 நிவாரண முகாம்களில் 608 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாராயணபுரம் ஏரிக் கரையை உயர்த்த மக்கள் விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்குச் செல்ல வேண்டும். சென்னையில் மீட்புப் பணிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் தடையின்றி மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 4 சுரங்கப் பாதைகள் மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மழைக்கால நோய் பரவலை தடுக்க 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். கார்களை மேம்பாலத்தில் நிறுத்தினால் அபராதம் விதிக்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கார்களை மேம்பாலத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மேம்பாலங்களில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம். காவல் துறையின் அறிவுறுத்தலை ஏற்று பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மழைக்காலங்களில் உயிர்சேதம் வரக் கூடாது என்பதை கருதில் கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiChennai rainChennai rainsdeputy cmHeavy rainNews7Tamilrain alertTN GovtTn Rainsudhaiyanidhi stalinweather forecastWeather Update
Advertisement
Next Article