சென்னை அணி வீரர் டெவான் கான்வேயின் தந்தை காலமானார்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்தவர் டெவான் கான்வே. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக நியூசிலாந்தில் செட்டில் ஆனார். இவர் சென்னை அணியை தவிர நியூசிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார். டெவான் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நியூசிலாந்து திரும்பினார்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் | கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!
இந்த நிலையில், டெவான் கான்வேயின் தந்தை டெண்டன் கான்வே உயிரிழந்ததாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் டெண்டன் கான்வே உயிரிழந்ததாக தெரிகிறது. தந்தையின் உடல்நலம் கருதியே டெவான் கான்வே ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நியூசிலாந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை அணி நிர்வாகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெவன் கான்வேயின் தந்தை மறைந்த இந்த கடினமான நேரத்தில் அவருடனும், அவரது குடும்பத்தினருடன் துணை நிற்கிறோம். எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்துள்ளது.