ஆல்ரவுண்டர் அஸ்வினை தட்டித்தூக்கிய #CSK... மீண்டும் இணையும் இந்திரன் சந்திரன் காம்போ!
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2025 ஐபிஎல் மகா ஏலம், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நாளையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியை கட்டமைக்கும் முயற்சியில் வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.
இதில் ஏலத்தில் நீண்ட நேரமாக எந்த வீரரையும் வாங்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, காத்திருந்து டெவான் கான்வே, ராகுல் திருப்பாத்தி, ரச்சின் ரவீந்திரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினை வாங்கியுள்ளது. இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அஸ்வின் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த 2008 முதல் 2015 சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாடி இருந்தார்.
தற்போதுவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்களின் விவரம்;
டெவான் கான்வே ரூ.6.25 கோடி
ரச்சின் ரவீந்திரா ரூ.4 கோடி
ராகுல் திரிபாதி ரூ.3.40 கோடி
ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.9.75 கோடி.