Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி!

01:09 PM Aug 05, 2024 IST | Web Editor
Advertisement

பராமரிப்பு காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

Advertisement

சென்னையை பொறுத்தவரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பது உள்ளிட்ட பல காரணங்களை கருத்திற்கொண்டு மக்கள் அதிகமாக பயன்படுத்துவது மின்சார ரயில்கள் தான். இந்த சூழலில் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் காரணமாக கடந்த 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 வரை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

ரத்து செய்யப்பட்டதற்கு மாறாக சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.  இருப்பினும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காலை நேரத்தில் ரயில் ரத்து செய்யப்பட்டிருப்பதால் அலுவலகம் செல்வோர் கடும் சிரமப்படுகின்றனர்.  இதனால் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் பயணிகள் பேருந்து மூலம் மட்டும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  இதனால் தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

Tags :
Chennaielectric trainLocal TrainpassengersTambaram
Advertisement
Next Article