Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!

08:01 AM Aug 03, 2024 IST | Web Editor
Advertisement

தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்புப்பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

Advertisement

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.3) முதல் ஆக.14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரையும் மற்றும் இரவு 10 முதல் 11.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதனால், இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி இன்று (ஆக.3) முதல் ஆக.14 வரை, தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகா் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், காவல்துறையின் அறிவுறுத்தலின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆக.14ம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BUSChennaielectric trainLocal Trainspecial busTambaramTN Govt
Advertisement
Next Article