Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#CHENNAI | கருணாநிதி நாணய வெளியீட்டு விழா - போக்குவரத்து மாற்றம்!

08:45 AM Aug 18, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் இன்று கலைஞர் 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்ப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயத்தை இன்று வெளியிடுகிறது.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் சென்னையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து கீழே விரிவாக காணலாம்.

1. அனைத்து விஐபி மற்றும் விவிஐபி வாகனங்களும் காமராஜர் சாலை, நேப்பியர் பாலம், வாலாஜா சாலை, அண்ணாசாலை மற்றும் கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு பயணத்தினை திட்டமிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2. மற்ற மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை. காமராஜர் சாலை, அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக கலைவாணர் அரங்கம் விழா நடைபெறும் இடத்தை அடையலாம்.

3. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் மாற்று வழியை தேர்வு செய்துசெல்லுமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. பல்வேறு மாவட்ட கனரக வாகனங்களில் இருந்து (பேருந்துகள் மற்றும் மாக்சிகேப்) பிற கட்சி வாகனங்கள்அண்ணா சிலை வழியாக பெரியார் சிலை, தீவுதிடல் மைதானம், PWD மைதானம் வழியாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தை நோக்கி செல்லுமாறு அனுமதிக்கப்படுவார்கள்.

5. பெரியார் சிலை, சுவாமி சிவானந்தா சாலை. எம்எல்ஏ விடுதி சாலை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் அனைத்து இலகுரக வாகனம் மற்றும் தன்னார்வலர்களின் மோட்டார் வாகனங்களும் அனுமதிக்கப்படும்.

6. வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கியமான பகுதிகளில் வணிக வாகனங்கள் 1000 மணி முதல் 1600 மணி வரை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

7. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாகவும் மற்றும் WIP- கள் வரும் வழித்தடத்திலும் வாகனங்களை நிறுத்தக்கூடாது. 8. தொண்டர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

9. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் காமராஜர்சாலை மற்றும் வாலாஜாசாலை முழுவதும் தற்காலிகமாக வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுரைப்படி வாகன ஓட்டிகள் மேலே கூறியவற்றை இன்று பின்பற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையை முன்னிட்டு இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :
CommemorativecoinKarunanidhiRajnath singh
Advertisement
Next Article