Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை: நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை - வேளச்சேரியில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!

08:19 AM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக வேளச்சேரி பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Advertisement

கேரள கடலோர பகுதிகளிலும் தென்கிழக்கு அரபிக்கடலிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே சென்னையில் பகல் நேரத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. போரூர், ராமாவரம், வளசரவாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி, அசோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்நிலையில், நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக சென்னை வேளச்சேரி சாலை முழுவதும் வெள்ளம் போல் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.  சாலைகளில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

Tags :
ChennaiChennai rainsHeavy rainNews7Tamilnews7TamilUpdatesTn RainsVelachery
Advertisement
Next Article