#Chennai | வேளச்சேரியில் 4வது வாரமாக களைகட்டிய ஹாப்பி ஸ்ட்ரீட்! நடனமாடி மகிழ்ந்த சென்னைவாசிகள்!
வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் சென்னைவாசிகளை COOL செய்வதற்காக ஹாப்பி
ஸ்ட்ரீட் மகிழ்ச்சி வீதி கொண்டாட்டம் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாகச் சென்னைவாசிகளிடையே காவல்துறையினர் ஒரு நட்பு பழக்கத்தைக் கொண்டு வர
வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர
காவல் துறை சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டில் கடந்த இரண்டு மாதங்களாக அண்ணாநகர், அண்ணா சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேளச்சேரி பகுதியில் கடந்த 3 வாரங்களாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், 4வது வாரமாக ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று (செப். 1) நடைபெற்றது.
இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சென்னையில் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு நபர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். நடனம் மட்டுமில்லாமல், கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், போன்ற விளையாட்டுகளையும் இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சி காலை 7.00 மணிக்கு தொடங்கி 9.00 மணி வரை இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
இந்த ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை ஒரு சில பகுதிகளில் மட்டுமல்லாமல் சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் நடத்த வேண்டும் என இளைஞர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஹாப்பி ஸ்ட்ரீட் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.