Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Chennai | தொடங்கியது திமுக செயற்குழு கூட்டம்!

10:20 AM Dec 22, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்குழு கூட்டம் தொடங்கியது.

Advertisement

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், கடந்த 18ம் தேதி தமிழ்நாட்டுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாலும் அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஒத்திவைக்கப்பட்ட திமுக தலைமை செயற்குழு கூட்டம் இன்று (டிச.22) நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டட திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் (டிச.22) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது சுலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தினை தவறாது கொண்டு வர வேண்டும். கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயல்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இக்கூட்டத்தின் முக்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Next Article