Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ரத்து : 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

08:12 AM Nov 17, 2024 IST | Web Editor
Advertisement

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக தாம்பரத்திலிருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Advertisement

தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யும் போது, இந்த நேரத்தில் கடற்கரை - பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும், அதே நேரத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் செல்லும் ரயில்கள் அட்டவணைப்படி இயங்கும், மற்ற ரயில் சேவை சாதாரணமாக இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் பொதுமக்களின் பயணங்கள் பாதிக்கும் எனவும், பணிக்கு செல்ல சிக்கல் ஏற்படும் என்பதால் விடுமுறை நாட்களை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், மாலை ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு10 பேருந்தும், தியாகராயர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகளும் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Chennai Beachelectric trainNews7TamilSouthern RailwaysSuburbanTambaram
Advertisement
Next Article