Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜூன் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

05:13 PM May 22, 2024 IST | Web Editor
Advertisement

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை ஜூன் 5 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட
தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கர் 2.5 கிலோ கஞ்சா
வைத்திருந்தகார அவர் உட்பட 4 பேர் மீது பழனி செட்டிபட்டி
காவல் நிலையத்தில் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலிஸ் காவலில் வைத்து
விசாரிக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி
செங்கமலசெல்வன் உத்தரவு பிறப்பித்தார்.  அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள்
சவுக்கு சங்கரை தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி காவல்துறையினர் போலீஸ் காவலில்
விசாரித்தனர்.  போலீஸ் காவல் விசாரணை நிறைவுற்றதை அடுத்து சவுக்கு சங்கர்
மதுரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

போலீஸ் காவல் விசாரணையின் போது காவல்துறையினர் என்னை துன்புறுத்தவில்லை, உணவு,  தங்குமிடம் வழங்கினார்கள்.  வழக்கறிஞர்கள் என்னை நேரில் சந்தித்தனர் என நீதிமன்ற கேள்விகளுக்கு சவுக்கு சங்கர் பதிலளித்தார்.  இதனையடுத்து கஞ்சா வழக்கில் 2 ஆம் முறையாக ஜீன் 5 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.

சவுக்கு சங்கரை காவல்துறையினர் அழைத்து வரும் போது முத்துராமலிங்க தேவர் குறித்து
இழிவாகப் பேசியதாக சவுக்கு சங்கர் ஒழிக என உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
கலைச்செல்வன் என்பவர் முழக்கமிட்டார்.  இந்நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்துச் செல்லப்பட்டார்.

Tags :
Narcoticsnews7 tamilNews7 Tamil Updatessavukku sankarsavukku shankarTamilNadu
Advertisement
Next Article