Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சபரிமலையில் பக்தர்களுக்கான அன்னதான உணவில் மாற்றம் ; TDB தலைவர்..!

சபரிமலை சன்னிதானத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
09:19 AM Nov 26, 2025 IST | Web Editor
சபரிமலை சன்னிதானத்தில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தானத் தலைவர் கே.ஜெயக்குமார், ”சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இது பக்தர்களுக்குப் பொருத்தமானதல்ல. எனவே, பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சன்னிதானத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்படும்' என்றார்.

Tags :
devoteesFood donationKeralalatestNewsSabarimalaiSabarimalai ayyappan templeTDB
Advertisement
Next Article