Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ராயன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்! - புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

08:46 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

தனுஷ் நடித்துள்ள 'ராயன்' திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் தனுஷின் 50-வது திரைப்படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள் : மீண்டும் சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சரானார் நிதின் கட்காரி!

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஜீன் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

Tags :
AparnaBalamuraliARRahmanCinamaUpdated50DhanushDusharaVijayanRaayanSunPictures
Advertisement
Next Article