Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

2மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

03:52 PM Mar 17, 2024 IST | Web Editor
Advertisement

சிக்கிம்  மற்றும் அருணாச்சல பிரதேசம் மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில்   (மார்ச் – 16)  அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்,  நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

முதல்கட்ட வாக்குப்பதிவு

முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.  ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.  இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

மூன்றாம் கட்டம்

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நான்காம் கட்டம்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96   தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம்

ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஒடிசா, மஹாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர்,  ஜார்கண்ட்,  உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆறாம் கட்டம்

6-ம் கட்ட தேர்தல் மே 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில்,  அன்று மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  குறிப்பாக ஹரியானா, டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஏழாம் கட்டம்

ஏழாம் கட்ட தேர்தல் மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 01-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஹிமாச்சல பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனை அடுத்து ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியில் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 2ம் தேதி இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags :
Arunachala PradeshElection commissionElection2024parliamentary ElectionParliamentary Election 2024Sikkim
Advertisement
Next Article