Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சந்திரபாடி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா - பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

06:50 AM May 01, 2024 IST | Web Editor
Advertisement

மயிலாடுதுறை அடுத்த சந்திரபாடி பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழாவில் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்கள் சுமந்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். 

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில்
பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, பால்குட திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.  இதனை முன்னிட்டு திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி மஞ்சள் உடை உடுத்திய காப்பு கட்டி விரதம் இருந்த 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள், செண்டை மேளம் முழங்க பால்குடங்கள் சுமந்து ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலை வந்தடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பால்அபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சந்திரபாடி, சின்னூர் பேட்டை மீனவ கிராமங்களைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அவர்கள் அம்மனுக்கு மாவிளக்கு தீபமிட்டு வழிபாடு நடத்தினர்.  பால்குடம் திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் நேற்று ஒரு நாள்
கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ChandrapadidevoteesMayiladuthuraiPaal Kudam
Advertisement
Next Article