Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு!...

09:15 AM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில், பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக தேதியை மாற்றியுள்ளார். 

Advertisement

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிலான தனிப்பெருன்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு முறை போன்று அல்லாமல், பாஜக இந்த முறை ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை நாட வேண்டியுள்ளது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் ஆதரவும் பாஜகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த நிலையில், ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு ஜூன் 8ல் பதவியேற்கவிருந்த நிலையில், பிரதமர் மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்பதற்காக தேதியை மாற்றியுள்ளார்.
Tags :
Chandrababu NaiduElections ResultsElections Results 2024Lok sabha Election 2024Loksabha Election
Advertisement
Next Article