Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெக கட்சி கொடி - அடுத்த வாரம் அறிமுகம் செய்ய வாய்ப்பு!

07:48 PM Mar 10, 2024 IST | Web Editor
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை தலைவர் விஜய் வீடியோ மூலம் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான
நடிகர் விஜய் கடந்த 8-ஆம் தேதி கட்சியின் உறுப்பினர் சேர்க்கைக்கான வீடியோ
ஒன்றை வெளியிட்டு, QR கோடு உள்ளிட்ட வழிகாட்டல்களை தெரிவித்தார். உறுப்பினர்
சேர்க்கை தொடங்கிய சில மணி நேரங்களில் லட்சக்கணக்கான நபர்கள் ஒரே நேரத்தில்
இணைய வழியாக உறுப்பினராக இணைய முயற்சித்ததால் சர்வர் முடங்கியது. மீண்டும்
சர்வ செயல்பட தொடங்கியதும், ஒரே நாளில் 20 லட்சத்திற்கும் மேலானோர்
உறுப்பினராக இணைந்தனர்.

இந்நிலையில், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மத்திய சென்னை சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் ஆன்லைன் செயலி மூலம் இல்லாமல் வேறு ஏதேனும் முறையில் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளலாம் என ஆலோசிக்கப்பட்டது. மேலும் தவெக சார்பில் மாநாடு நடத்தப்பட்டு, அந்த மாநாட்டில் கட்சியின் கொடி, சின்னம், அதனுடைய நிறங்கள் குறித்து கட்சியின் தலைவர் வெளியிடுவதாக இருந்தது.

ஆனால் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநாட்டில் வெளியிட இருந்த கட்சியின் கொடி அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் செயலியை வீடியோ மூலம் வெளியிட்டது போல் கட்சியின் கொடியையும் வீடியோ மூலம் தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
தமிழக வெற்றிக் கழகம்actor vijayflagtvkTVK Vijay
Advertisement
Next Article