Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழகத்தில் ஆகஸ்ட் 3 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

08:42 AM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில், ஆகஸ்ட் 3 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Advertisement

அதன்படி, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை சற்று ஓய்ந்துள்ளது. இருப்பினும், பிற மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இது, அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.

இந்நிலையில், இன்று முதல், ஜூலை 30 வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். வலுவான தரைக்காற்று, மணிக்கு,, 40 கி.மீ., வேகத்தில் வீசலாம். இதேபோல, ஆகஸ்ட் 3 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு, 55 கி.மீ., வரையிலான வேகத்திலும்; இடையிடையே, மணிக்கு 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
IMDRaintamil naduTn Rains
Advertisement
Next Article