Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்...

01:50 PM Jul 05, 2024 IST | Web Editor
Advertisement

இன்று முதல் ஜூலை 17ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் வானிலை குறித்த பல்வேறு அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி, தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக ஜூலை 5 முதல் ஜூலை 17ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். தெற்கு, மத்திய, வடக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும். தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு, வடமேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் 'தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக் காற்று வீசும்' என்பதால் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Chennai rainstamil naduTn RainsWeatherWeather Updates
Advertisement
Next Article