#Rainalert அடுத்த 2 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. எனினும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று ஒருசில பகுதிகளில் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், அதிகபட்சமாக 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : போலி செய்திகள் குறித்து #Awarness வீடியோ – சென்னை பெருநகர காவல் துறை விழிப்புணர்வு!
இந்நிலையில் இரவு 10 மணி வரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.