அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் தாக்க பாதிப்பிலிருந்தே சென்னை இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், இன்று (டிச. 8) அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(டிச.8) மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் நகரில் பெரும்பாலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு நாட்களுக்கு, சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.