காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே நள்ளிரவு முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்பதால் மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருபத்தூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.