Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10:26 AM Aug 16, 2025 IST | Web Editor
தமிழகத்தில் இன்று 32 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையமானது, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும்.

Advertisement

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 32 மாவட்டங்களில்  காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடௌம். மேலும் இதே போன்று, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
ClimateHeavyRainRainTamilNaduweatheralertWeatherForecastWeatherUpdate
Advertisement
Next Article