மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 13) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுப்பெற்று, மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, வங்கக்கடலில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்பத்தூர், தேனீ, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.