Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

11:20 AM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.  சென்னைக்கு தென் கிழக்கே 510 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.  இதன் காரணமாக,  தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை, திருவாரூர்,  ராமநாதபுரம்,  திருப்பூர்,  திண்டுக்கல்,  தென்காசி,  விருதுநகர்,  தூத்துக்குடி, திருநெல்வேலி,  கன்னியாகுமரி,  புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  ‘சிம் கார்டு’ வாங்க புதிய விதிகள் அமல்!

அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர்,  காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு,  சென்னை,  விழுப்புரம், கடலூர்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  சிவகங்கை,  நீலகிரி,  தேனி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.  தற்போது, சென்னையில்  நுங்கம்பாக்கம்,  ஆயிரம் விளக்கு,  எழும்பூர்,  ராயபுரம்,  கே.கே.நகர்,  வடபழனி, அண்ணாநகர்,  அம்பத்தூர்,  ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே,  தமிழ்நாடு முழுவதும் புயல் அபாயம் நிலவி வரும் நிலையில்,  கடலோரப் பகுதிகளில் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புயல் தாக்கம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் கரையின் பரப்பளவு அதிகரித்துள்ள நிலையில் கடல் 100 மீட்டர் உள்வாங்கியுள்ளது.  நாகப்பட்டினம் துறைமுகம் உட்பட 5 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags :
ChennaiRMCHeavy rainnews7 tamilNews7 Tamil UpdatesRainRain UpdateWeather Update
Advertisement
Next Article