Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சென்னை மற்றும் புறநகர்களில் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்!

12:53 PM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று (26.111.2024) முதல் 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisement

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து கொண்டுவருவதால், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/praddy06/status/1861265109827625025

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளதாவது:

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழையானது அடுத்த 4-5 நாள்களுக்கு நீடிக்கும். டெல்டா(நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர்) மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று அதி கனமழையை எதிர்பார்க்கலாம். கடலூர், புதுவையிலும் கனமழை பெய்யும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இலங்கைக்கு கீழே உள்ளது. இது வடக்கு நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. மிகவும் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளதால், கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் புறநகரில் இன்றிலிருந்து 4-5 நாள்களுக்கு, டிசம்பர் 1 வரை மழை நீடிக்கும். சென்னையில் நவ. 27 ஆம் தேதியில் இருந்து மிக கனமழை பெய்யத் தொடங்கவுள்ளது. தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழே கரையை கடக்கும்போது, வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ChennaiRainrain alertTamil Nadu Weatherman
Advertisement
Next Article