Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

01:39 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக  ஜன.07-ம் தேதி முதல் தென் மாவட்டங்கள் மற்றும் வடதமிழக  கடலோர மாவட்டங்களில்  அநேக இடங்களிலும், வடதமிழக உள்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதையும் படியுங்கள்:  அனைத்து வழித்தடங்களிலும் முழுமையாக பேருந்துகள் இயக்கம்..! – அமைச்சர் சிவசங்கர் தகவல்

இதனைத் தொடர்ந்து நேற்றும் (ஜன.08) தமிழ்நாட்டில் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்தது.  இந்த நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ,ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜன.09) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
Heavy rainIMOMeteorological Departmentnews7 tamilNews7 Tamil UpdatesrainfallWeather Update
Advertisement
Next Article