Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மகான் 2” திரைப்படத்திற்கு வாய்ப்பு?

02:20 PM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

விக்ரம் அவரது மகனான துருவ் விக்ரம் நடித்த படமான ‘மகான்’ இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் மகான். இந்தப்படத்தின் வெற்றிக்கு பெரும் பக்கபலமாக இருந்தது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை. விக்ரம் நடித்த ’சாமி’ மற்றும் ’பொன்னியின் செல்வன்’ ஆகிய திரைப்படங்கள் இரண்டு பாகங்களாக வெளியான நிலையில் தற்போது அவர் நடித்த ’மகான்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

விக்ரம் நடித்த ’மகான்’ திரைப்படம் வெளியாகி சரியாக 2 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து இது குறித்த போஸ்டர் ஒன்றை வெளியே தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள விக்ரம் ’மகான் 2’ என்று கேள்விக்குறியோடு பதிவு செய்துள்ளார். தந்தை மகனான விக்ரம், துருவ் விக்ரம் நடித்த ’மகான்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இதனையடுத்து ‘மகான் 2’ திரைப்படம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்த இந்த படத்தில் சிம்ரன், பாபி சிம்ஹா, உள்பட பலர் நடித்திருந்தனர் என்பதும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
bobby simhaChiyaan VikramDhruv Vikramkarthik subbarajMahaanNews7TamilNews7Updatessanthosh narayananvikram
Advertisement
Next Article